கடந்த 14.4.2015
செவ்வாய்க் கிழமை, சித்திரைத் திங்களின் முதல் நாளில், மாலை
6.00 மணியளவில்,
தஞ்சாவூர் உலகத் திருக்குறள் பேரவையும்,
ஓட்டல் பரிசுத்தமும்
இணைந்து,
பரிசுத்தம் ஓட்டலின் திறந்த வெளி அரங்கில் நடத்திய,
சமய நல்லிணக்க விழா
சீரோடும் சிறப்போடும் நடைபெற்றது.
திருக்குறள் மாரிமுத்து அவர்களின்
கடவுள் வாழ்த்துடன் விழா தொடங்கியது.
பாவலரேறு பாலசுந்தரம் அவர்களின் திருமகனார், திருச்சி, பாரதிதாசன் பல்கலைக் கழக, தமிழ்த் துறைத் தலைவர்
முனைவர் பா.மதிவாணன் அவர்கள்
விழாவிற்குத் தலைமையேற்று
தலைமையுரையாற்றினார்
இந்தியக் குடியரசுத் தலைவரின் பாராட்டினைப்
பெற்ற திரு உ.அலிபாபா அவர்கள் முன்னிலையுரையாற்றினார்.
மத்திய அரசால் பாராட்டப் பெற்ற,
தஞ்சையின் புகழ் பெற்ற மருத்துவர்,
கலைமாமணி சு.நரேந்திரன் அவர்களை,
தமிழ்க் கடல், தொல்காப்பியர் விருது பெற்ற
முனைவர் இரா.கலியபெருமாள் அவர்கள்
சங்க இலக்கியத் தனிப் பாடல்களால்
வாழ்த்தி மகிழ்ந்தார்.
தொடர்ந்து
முனைவர் பா.வளன் அரசு அவர்கள்
தமிழின் முகவரி – திருக்குறள்
என்னும் தலைப்பில் சீரிய உரையாற்றினார்.
குறள் நெறிச் செல்வர் நா.சண்முகம்
அவர்கள் நன்றி கூற விழா இனிது நிறைவுற்றது. புலவர் இரா.கோபால கிருட்டினன்
அவர்கள் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா...
ReplyDelete