நண்பர்களே, வணக்கம். நலம்தானே.
இன்றைக்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன், தவத்திரு
குன்றக்குடி அடிகளார் அவர்களால், தஞ்சையில், உலகத் திருக்குறள் பேரவை
தோற்றுவிக்கப் பெற்றது. இன்று தமிழகம் முழுவதும், கிளைகள் பரப்பி, ஆல் போல்
இப்பேரவை தழைத்துப் பரவியுள்ளது.
தஞ்சாவூர், உலகத் திருக்குறள் பேரவையானது,
தொடங்கிய நாள் முதல், இன்று வரை, வாரந்தோறும் கூட்டம், திங்கள் தோறும் கூட்டம்,
ஆண்டுதோறும் கூட்டம் என, தனது பணியினைச் செவ்வனே, தொய்வின்றிச் செய்து வருகின்றது.
தவத்திரு
பொன்னம்பல அடிகளார்,
மாநிலத்
தலைவர்.
குறள்நெறிச்
செல்வர், பாரிவேள்
திரு
சி.நா.மீ.உபயதுல்லா,
மாநிலத்
துணைத் தலைவர்
குறள்நெறிச்
செல்வர்
திரு
செ.ப.அந்தோணிசாமி,
தலைவர்
குறளறச்
சுடர்
திரு
பழ.மாறவர்மன்,
செயலாளர்.
குறள்நெறிச்
செல்வர்
திரு
கு.அமல்ராஜ்,
பொருளாளர்.
நண்பர்களே, சில நாட்களுக்கு முன்னர்,
மாணிக்கம் அச்சக உரிமையாளரும், தஞ்சாவூர் உலகத் திருக்குறள் பேரவையின் செயலாளருமான
குறளறச் சுடர் திரு பழ.மாறவர்மன் அவர்களைச் சந்தித்தேன். அப்பொழுது, உலகத்
திருக்குறள் பேரவையின் செயல்பாடுகளை, இவ்வுலகின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும்
தமிழர்கள், அறியும் வண்ணம் வலைப் பூ ஒன்றினைத் தொடங்க வேண்டும் என்ற தனது
விருப்பத்தினைத் தெரிவித்தார்.
இதோ வலைப் பூ. உலகத் திருக்குறள் பேரவையின்
தமிழ் வளர்ச்சிப் பணிகள் பற்றிய செய்திகள், நூல் வெளியீட்டுச் செய்திகள் மற்றும்
வாராந்திரக் கூட்டங்கள், திங்கள் கூட்டங்கள் போன்ற அனைத்துச் செய்திகளையும்
தாங்கி, இவ்வலைப் பூ வெளி வரும்.
நண்பர்களே,
உங்கள் நல்லாதரவினை வேண்டுகிறோம்.
என்றென்றும்
அன்புடன்,
உலகத் திருக்குறள் பேரவையின்
40ஆம் ஆண்டு விழாவிற்கு
வருக வருக
என
அன்போடு அழைக்கின்றோம்